‘பிரபாஸ் 20 ‘ படத்தின் புதிய அப்டேட்…..!

‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது பிரபாஸ் 20′ படத்தை தயாரிக்கின்றனர் . கொரோன அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

தற்போது படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டதால் ஆகஸ்ட் மாத படப்பிடிப்பு ஆரம்பிக்க இப்போதே ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டது ‘பிரபாஸ் 20’ படக்குழு.

இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் ஜூலை 10ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.