பாகுபலி’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் ரசிகர்களைப் பெற்றவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். சமூக வலைதளங்களில் இவருக்கான பக்கங்கள் இருந்தாலும் அதிகம் நாட்டம் இல்லாமல் இருந்தவர்.

சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இந்தத் தகவல் தெரிந்ததுமே கிட்டத்தட்ட 7.5 லட்சம் பேர் அவரை ஒரே நாளில் அங்கு பின் தொடர ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் அவர் முதலாவதாக தனது பாகுபலி படத்தின் புகைப்படத்தைத்தான் பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்ட ஒரே நாளில் 8 லட்சத்து 69 ஆயிரம் பேர் லைக்ஸ் போட்டிருக்கிறார்கள்.