மூன்று மொழி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் பிரபாஸ் சம்பளம் ரூ. 100 கோடி.

மூன்று மொழி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் பிரபாஸ் சம்பளம் ரூ. 100 கோடி.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான “பாகுபலி” மற்றும் ’’பாகுபலி- 2’ ஆகிய இரு படங்களும்  அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக்கொடுத்துள்ளன.

படத்தின் ஹீரோ, பிரபாசுக்கு கூடுதலாகவே மவுசு ஏற்பட்டுள்ளது.

விஜயாந்தி என்ற பட நிறுவனம், தனது பொன்விழா ஆண்டையொட்டி தயாரிக்கும் புதிய படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது.

‘நடிகை கீர்த்தி சுரேஷுக்கு  தேசிய விருது பெற்றுத்தந்த ‘நடிகையர் திலகம்’ ( தெலுங்கில் மகாநடி) திரைப்படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாகப் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

’பிரபாஸ்- 21 ‘’ என்று இந்த படத்துக்குத் தற்காலிகமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரபாஸ் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிக்க பிரபாஸ்  று கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இதன் மூலம் பிரபாஸ், ஊதிய விஷயத்தில் ரஜினிகாந்தை மிஞ்சியுள்ளார்.

இந்தியாவில் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் பெறும்  நடிகராக இருந்து வந்தார்.

’தர்பார்’ படத்துக்கு அவர் 70 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அவரது சம்பளத்தைக் காட்டிலும் 30 கோடி ரூபாய் அதிகம் பெற்றுள்ளார், பிரபாஸ்.

இதில் சம்பளம் 70 கோடி ரூபாய்,’டப்பிங்’ உரிமை- 30 கோடி ரூபாய்.

இப்போது  பிரபாஸ் ‘’ RADHE SHYAM’’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

 ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

-பா.பாரதி.