“பிரபாஸ் யதார்த்தவாதி நட்புடன் பழகுபவர்” ஸ்ருதி ஹாசன் புகழாரம்…

 

‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல், அடுத்து டைரக்டு செய்யும் புதிய படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி- ஸ்ருதி ஹாசன்.

இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் – இது. ‘சலார்’ என இந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் படம்.

இதன் முதல் ஷெட்யூல் முடிந்து விட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் ஸ்ருதி நடிக்கும் முதல் படமும் இதுதான்.

பிரபாசுடன் ஜோடி சேர்ந்தது குறித்து ஸ்ருதி அளித்துள்ள பேட்டி இது:
“தெலுங்கில் எல்லா ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். பிரபாசுடன் மட்டும் நடிக்காமல் இருந்தேன். இப்போது சலார் படத்தில் பிரபாசுடன் நடித்ததன் மூலம் அந்த குறை நீங்கி விட்டது. பிரபாஸ் யதார்த்தமான மனிதர். பழகுவதற்கு இனிமையானவர்.

சாத்தியமாகும் விஷயங்களை பற்றி மட்டுமே அவர் யோசிக்கிறார். இது முழு நீள ஆக்‌ஷன் படமாக இருந்தாலும் எனக்கு சண்டை காட்சிகள் இல்லை.

கொரோனா ஓரளவு குறைந்துள்ள நிலையில், இந்த படத்துக்காக முன் எச்சரிக்கை ஏற்பாடுகளுடன் நடித்தது புதிய அனுபவம்” என்கிறார், ஸ்ருதி.

– பா. பாரதி