பாகுபலி ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபாஸ் இல்லை

பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பன்மொழி படமாக வெளிவந்து அனைத்து மொழிகளிலும் பாகுபலி 2 வெற்றி வாகை சூடியது.   ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்த படத்தில் பிரபாஸ், ராணா, தமனா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ்,  நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.   ராஜ மௌலியின் அடுத்த படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இப்படத்தில் இரு தெலுங்கு கதாநாயகர்கள் நடிக்க உள்ளன.  ஜூனியர் என் டி ஆர், மற்றும் ராம் சரண் ஆகிய இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ள இந்தப் படஹ்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் என்னும் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது.   மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இருபடங்களும் வெற்றி பெற்றதால் அடுத்த படத்திலும் பிரபாஸ் நடிப்பார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது.   ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக ஜூனியர் என் டி ஆரும் ராம் சரணும் நடிக்க உள்ளனர்.