பிரபாஸ், பூஜா ஹெக்டே பட பர்ஸ்ட்லுக் வைரல்..

பாகுபலி பிரபாவின் தற்போதைய படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பார்வை அதிரடியாக வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘ராதே ஷியாம்’ என்று தெலுங்கில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழுக்கு பெயர் மாறுமா அல்லது அதே டைட்டிலா என்று முடிவாகவில்லை.


பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று (ஜூலை 10) வெளியிடப்பட்டது. இதே நாளில், பிரபாஸின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லான ‘பாகுபலி தி பிகினிங்’ படம் திரைக்கு வந்தது. இந்த சந்தர்ப்பத் தில், ‘ராதே ஷியாம்’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராதா கிருஷ்ண குமார் இப்படத்தை இயக்குகிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபாஸும் பூஜா ஹெக்டேவும் சேர்ந்து நடனமாடும் அசத்தலான போஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. பிரபாஸ் ரசிகர்கள் பர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து டிரெண்டிங் செய்து வருகின்றனர். நெட்டில் இது வைரலாகி வருகிறது