பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் வெளியானது

பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

ஏ.சி.முகில் இயக்கும் பொன்மாணிக்க வேல் படத்தில் பிரபுதேவா பொன் மாணிக்கவேல் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மற்றும், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு டி.இமான் இசை அமைத்துருக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரித்து வருகிறார்.

இந்தநிலையில், பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.