டில்லி:

த்திய நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில்,  பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

சரக்குகளை நீர்வழிப் போக்குவரத்து மூலம் எடுத்துச் செல்வது ஊக்கப்படுத்தப்படும் என தெரிவித்த நிர்மலா சீதாராமன்,

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்றும் கூறினார்.

பாரத் மாலா திட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளை இணைக்க உதவும் என்றும், 300 கிலோ மீட்டருக்கு புதிய மெட்ரோ லைன் 2019-20 நிதி ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்