டில்லி,

ரியானா சிறுவன் கொலை வழக்கு  காரணமாக 11ம் வகுப்பு மாணவனை சிபிஐ கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன், பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். அதன் அருகே கத்தியும் கிடந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாது. அதைத்தொடர்ந்து போலீசார்  பலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாகப் பள்ளி பேருந்து நடத்துநர் அசோக் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மாணவரின் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை வைத்தனர். அதைத்தாடர்ந்து வழக்கை சிபிஐக்கு மாற்ற ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் ரியான் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக  11ம் வகுப்பு மாணவர் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாணவனின் பெற்றோர் தங்களது மகன் அப்பாவி என்றும், அவனுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி வருகின்றனர்.

7வயது சிறுவனை  அதே பள்ளியில் படித்துவந்த மேல்நிலை பள்ளி மாணவன் கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உளளது.