அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கு நடனமாடும் நடிகை பிரகதி….!

வீட்ல விசேசங்க படத்தில் நடித்திருந்த நடிகை பிரகதி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி அரண்மனைக் கிளி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்காக பிரகதி தன் மகனுடன் ஆடிய நடனம் சமூகவலைதளத்தில் வைரலானது. தற்போது ’அந்த அரபிக்கடலோரம்’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் பிரகதி.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரகதி அளித்த பேட்டி ஒன்றில் தன்னிடம் முன்னணி காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாகவும், அவரை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .