https://www.instagram.com/p/B-4PYXTDSOe/

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த படம் கொரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது .

இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை பிரகதி தனது மகனுடன் மாஸ்டர் பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீட்ல விசேசங்க படத்தில் நடித்திருந்த நடிகை பிரகதி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி அரண்மனைக் கிளி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .