ஜிப்ரால்டர் சர்வதேச செஸ் தொடர் – தமிழகத்தின் பிரக்ஞானந்தா முன்னேற்றம்!

ஜிப்ரால்டர்: ஐரோப்பாவின் ஜிப்ரால்டரில் நடந்துவரும் சர்வதேச செஸ் தொடரின் நான்காவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார்.

ஜிப்ரால்டரில் சர்வதேச செஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பிலும் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில், தமிழகத்தின் பிரக்ஞானந்தாவும் ஒருவர்.

இத்தொடரில் மொத்தம் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் மர்ஜின் வோலோதரை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா. இப்போட்டியின் 48வது நகர்த்தலில் வெற்றியை தனதாக்கினார் அவர்.

இதுவரை, நான்கு சுற்றுகளின் முடிவில் இந்திய வீரர் நாராயண் 3.5 புள்ளிகள் பெற்று 12வது இடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 3.0 புள்ளிகள் பெற்று 48வது இடத்தில் உள்ளார்.