குழந்தை சுஜித்திற்கு தனது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை அர்ப்பணித்த தமிழர்!

சென்னை: திருச்சி மாவட்டத்தில் ஆழ்துணைக் கிணற்றில் விழுந்து மரணமடைந்த 2 வயது குழந்தை சுஜித்திற்கு, தனது உலக யூத் செஸ் சாம்பியன் பட்டத்தை(18 வயது) அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார் தமிழ்நாட்டு செஸ் வீரர் பிரக்யநந்தா.

சமீபத்தில், 18 வயதிற்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில், உலக யூத் செஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் தமிழக வீரர் பிரக்யநந்தா.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, பயன்படாத ஆழ்துணை கிணற்றில் சிக்கி, 2 வயது குழந்தை சுஜித் மரணமடைந்தான். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் குழந்தை மரணமடைந்ததாக விமர்சனங்கள் உள்ளன.

இச்சம்பவம் இன்னும் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை. பலரும் அதைப்பற்றிய பேச்சை இன்னும் விடவில்லை. இந்நிலையில், இச்சம்பவம் தமிழகத்தின் இளம் செஸ் வீரர் பிரக்யநந்தாவையும் பாதித்துள்ளது.

இதனால், தான் சமீபத்தில் வென்ற உலக யூத் செஸ் சாம்பியன் பட்டத்தை, 2 வயதிலேயே மோசமான மரணத்தை சந்தித்த சுஜித்திற்கு அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார் அவர்!

You may have missed