முதன்முறையாக கதை சொல்ல வருகிறார் பிரகாஷ்ராஜ்.. தி லிட்டிள் டக் கேர்ள் ஆடியோ புக்..

டிகர் பிரகாஷ்ராஜ் பல்வேறு கதாபாத்திரங் களில் நடித்திருக்கிறார். நட்சத்திர கூட்டத்துக்கு இடையே நடித்தாலும் அவரது குரல் தனித்துவமாக தெரியும். அப்படியொரு குரல் அவருக்கு உண்டு. இதுவரை சினிமாவில் பேசிய அவர் முதன்முறையாக குரலை மட்டும் கொண்டு கதை சொல்லவிருக்கிறார். அனிதா நாயர் என்ற ஆசிரியர் எழுதியுள்ள ’தி லிட்டிள் டக் கேர்ள்’ என்ற கதையை தனது குரலில் ஏற்ற இறக்கங்களுடன் சொல்லவிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
இதுபற்றி அவர் கூறும்போது,’தி லிட்டிள் டக் கேர்ள் ‘ கதையைகேட்டபோது பரவசமாக இருந்தது. அதுதான் இந்த கதைக்கு குரல் கொடுக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம். இது எனக்கு ஒரு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது. மேலும் இதில் நீங்கள் எல்லாவற்றையும் கற்பனையில் வடிவமைத்துகொள்ளலாம்’ என்றார் பிரகாஷ்ராஜ்.