வாழும் போராளியின் கதையில் நடிப்பதில் பெருமை அடைகிறேன் : பிரகாஷ்ராஜ்

டிராபிக் ராமசாமி அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி புகழ் பெற்றவர்.   அவருடைய கதை தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.     இதில் டிராபிக் ராமசாமியாக விஜய்யின் தகப்பனார் எஸ் எ சந்திரசேகரும் அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கின்றனர்.    போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.  இது தவிர ஆர் கே சுரேஷ்,  உபாசனா, இமான் அண்ணாச்சி, அம்பிகா, மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இது குறித்து பிரகாஷ் ராஜ், “தற்போது வாழும் ஒரு சமூக போராளியின் கதையை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.   இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்.” எனக் கூறி உள்ளார்.   இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் குகன் எஸ் பழனி ஆவார்.   வைரமுத்துவின் பாடல்களுக்கு பாலமுரளி பாலு இசை அமைக்கிறார்.   இவர் ஏற்கனவே ஹர ஹர மகாதேவகி படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடை பெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி