கௌரி லங்கேஷை கொன்றவர்கள் என்னையும் கொல்ல திட்டம் : பிரகாஷ்ராஜ்

பெங்களூரு

த்திரிகையாளர் கௌரி லங்கேஷை கொன்றவர்கள் தம்மையும் கொல்ல திட்டம் தீட்டி இருந்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் அவருடைய வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.   அதை ஒட்டி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவலர்கள் கொலையாளிகள் என கருதப்படும் சிலரைக் கைது செய்து விசாரித்ததில் அந்த கொலையாளிகள் மேலும் சிலரைக் கொல்ல திட்டம் இட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவ்வாறு கூறப்பட்டவர்களில் பிரபல நடிகர்களான கிரீஷ் கர்னாட் மற்றும் பிரகாஷ் ராஜுவும் உள்ளனர்.  இது குறித்து  சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவலர்கள் ஒரு கன்னட செய்திச் சேனலுக்கு பேட்டி அளிக்கையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடி குறித்தும் பாஜக குறித்தும் கடுமையாக விமர்சித்து வருவதால் அவரைக் கொல்ல திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறி உள்ளனர்.

இதற்கு பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பதிவில், “பெங்களூரு : கௌரியைக் கொன்றவர்கள் நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல திட்டமிட்டதாக சிறப்பு புலனாய்வுப் படை விசாரணையில் தெரிய வந்துள்ளது.    எதிர்ப்புக் குரலை அடக்க எப்படியெல்லாம் முயற்சி நடக்கிறது பாருங்கள்.    எனது குரல் இன்னும் பலமால ஒலிக்கும்.  கோழைகளே.    உங்கள் எதிர்ப்பு அரசியல் மூலம் என்னை அழிக்க முடியாது” என பதிந்துள்ளார்.