நான் படித்த வகுப்பறையிலேயே இன்று வாக்களித்தேன்” – நடிகர் பிரகாஷ்ராஜ்

 

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

இதில், கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேச்சையாக மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘41 ஆண்டுகளுக்கு முன் எந்த வகுப்பறையில் உட்கார்ந்திருந்தேனோ அதே இடத்தில் இன்று எனது வாக்கை பதிவு செய்தேன். மறக்க முடியாத நினைவுகளும், புதிய பயணமும் என பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி