னாஜி

கோவா முதல்வராக பாஜக தலைவர் பிரமோத் சாவந்த் நேற்று நள்ளிரவு பதவி ஏற்றுள்ளார்.

நேற்று முன் தினம் மாலை புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்தார். அதனால் சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 ஆனது. கோவா சட்டப்பேரவையில் 36 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே பெரும்பான்மையை பெற பாஜகவுக்கு 7 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்பட்டது.

மனோகர் பாரிக்கர் மரண செய்தி வந்ததில் இருந்தே அடுத்த முதல்வர் குறித்த ஊகங்கள் வரத் தொடங்கின. காங்கிரஸ் கட்சி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோவா ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தது. அதே நேரத்தில் பாஜக தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்தது. அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக ஈடுபட்டது.

முதல்வர் தேர்வில் பலரது பெயர்கள் ஆராயப்பட்டன. இறுதியில் பாஜகவின் பிரமோத் சாவந்த் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பதவி ஏற்பு விழா நேற்று இரவு 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாஜகவினர் தங்கள் கட்சி முதல்வருக்கு போதிய ஆதரவை சேகரிக்க நேரம் ஆனதால் நள்ளிர்வு 1.50 மணிக்கு பதவி ஏற்புவிழா நடந்தது.

கோவா மாநில சட்டப்பேரவை பாஜக தலைவராக தேர்ந்தெடுகப்பட்ட பிரமோத் சாவந்த் க்கு கோவா ஆளுநர் கோவா மாநில முதல்வராக பதவிப் பிரமாணம் செய்வித்தார். சுமார் 45 வயதாகும் பிரமோத் சாவந்த், “பாஜக என்னை நம்பி என்னிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்துள்து. நான் இந்த நிலைக்கு முன்னேற எனக்கு மனோகர் பாரிக்கர் தான் உதவி செய்துள்ளார்” என கூறி உள்ளார்.