பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பிரமோஸ் பொறியாளர் கைது

நாக்பூர்
பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன  பிரமோஸ் நிறுவன பொறியாளர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யபட்டுள்ளர்.
பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்திய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் ரஷ்யாவின் மிலிடரி இண்டஸ்டிரியல் கன்சோரியம் ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து நடத்தும் கூட்டு நிறுவனம் ஆகும். புகழ்பெற்ற பிரமோஸ் ஏவுகணைகளை இந்த நிறுவனம் இந்திய ராணுவத்தினருக்கு தயாரித்து அளித்துள்ளது. இந்த நிறுவனத்தில் தயாரிப்பு பிரிவில் தலைமை பொறியாளராக பணி புரிந்தவர் நிஷாந்த் அகர்வால்.

நிஷாந்த் அகர்வால் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவருக்கு மூன்று முகநூல் கணக்குகள் உள்ளது. இதில் ஒரு கணக்கு மூலம் சில பாகிஸ்தானியர்களுடன் இவர் தொடர்பு வைத்துள்ளதாக தகவல்கள் வந்தன. அதை ஒட்டி இவருக்கு தெரியாமலேயே இவரது வங்கிக் கணக்குகள் பரிசோதிக்கப்பட்டன. அந்த வங்கிக் கணக்குகளில் பல முறை பெரிய தொகைகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை தொட்ர்ந்து நிஷாந்த் அகர்வால் கைது செய்ய்ப்பட்டுள்ளார். முதல் கட்ட விசாரணையில் இவர் ஒரு சில தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ எஸ் ஐ யிடம் பகிர்ந்துக் கொண்டது தெரிய வந்துள்ளது. அதற்கு பதிலாக பாகிஸ்தான் உளவுத்துறை இவருக்கு அமெரிக்காவில் மிகவும் அதிகம் ஊதியம் கிடைக்கக் கூடிய ஒரு பணியை பெற்று தந்துள்ளது.
இவரை கைது செய்த நாக்பூர் நகர காவல்துறையினர் நீதிமன்ற்த்தில் ஆஜர் செய்துள்ளனர். இவரிடம் மூன்று நாள் விசாரனை நடத்த பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற நீதிமன்ற உத்தரவுப்படி நிஷாந்திடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கைது செய்யப்பட நிஷாந்த் அகர்வாலின் தந்தை ரூர்கி நகரில் மருத்துவராக உள்ளார். நிஷாந்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. இவர் நாக்பூரில் உள்ள உஜ்வால் நகர் பகுதியில் தன் மனைவியுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.