பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை – அவரது மகன் கூறுவது என்ன?

புதுடெல்லி: குருதியியக்க அடிப்படையில், தனது தந்தையின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளதாக கூறியுள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன்.

பிரணாப் முகர்ஜிக்கு, மூளை உறைவை சரிசெய்ய வ‍ேண்டி, சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அவருக்கு வென்டிலேட்டர் முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறின.

மேலும், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், குருதியியக்க அடிப்படையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறியுள்ளார் அவரின் மகன்.

மேலும், நலம் விரும்பிகள் தங்களின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துக்களையும் தொடர்ந்து நல்கி, அவரின் விரைந்த குணமடைதலுக்கு துணை நிற்குமாறும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.