Random image

சகிப்புத்தன்மையால் இந்தியா வலிமை அடைந்தது…..பிரனாப் முகர்ஜி

நாக்பூர்:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஆங்கிலத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘ இந்தியாவின் தேசியம், தேசியவாதம், தேச பக்தி குறித்த எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இங்கே வந்துள்ளேன். இந்தியாவில் உள்ள பழமையான கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மாணவர்களை கவர்ந்து இழுத்தது. மேலும், பல சர்வதேச பயணிகள் இந்தியாவுக்கு வருகை புரிந்து இந்த தேசம் குறித்து பல விதமான விளக்கங்களை அளித்தனர்.

நமது பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து ஏற்றுக் கொள்ள வேண்டும், இங்குள்ள பிரிவினையை கொண்டாட வேண்டும். சங்கமம் மற்றும் சகிப்புக்கு பின்னர் தான் நமது தேசத்தின் அடையாளம் வெளிப்பட்டது. பல்வேறு கலாச்சாரம், நம்பிக்கை நம்மை சிறப்புடையவர்களாகவும், சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் உருவாக்கியது. சகிப்புத்தன்மை தான் இந்தியாவை வலிமை அடைய செய்தது’’ என்றார்.

 

புகைப்படம் உதவி: ஏஎன்ஐ…நன்றி

You may have missed