டெல்லி: சிகிச்சையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் பிரணாப் முகர்ஜி மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்டு 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா காரணமாக வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ள அவருக்கு, மூளையில் ரத்தம் உறைந்ததால் அதற்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

அவர் தொடர்ந்து கோமா நிலையில் உள்ளார். இந் நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து டெல்லி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனாலும் அவர் கோமாவில் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.