டில்லி

த்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறியதால் தமது பெற்றோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரணாய் ராய் மகள் சோனாலி போஸ் தெரிவித்துள்ளார்.

என் டி டி வி நிறுவனர் பிரணாய் ராய் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோர் மீது ஐசிசிஐ வங்கிக் கடன் வாங்கியதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவர்கள் இருவரும் தனி விமானம் மூலம் வெளிநாடு செல்ல விமானநிலையம் சென்றனர். ஆனால் அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதற்குப் பல பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

 

சோனாலி போஸ்

பிரணாய் மற்றும் ராதிகாவின் மகளான சோனாலி போஸ் திரைப்படத் துறையில் இயக்கநராக உள்ளார்.

பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு சோனாலி போஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத் தள பக்கத்தில், “ஒரு அரசு எவ்விதம் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை அறியாத போது அந்த நாட்டின் குடி மக்களாக வாழ யாரும் விரும்ப மாட்டார்கள். இத்தகைய நடவடிக்கைகளால் மக்களுக்கு அரசு துரோகம் இழைக்கிறது. இது தனி மனித உரிமை மற்றும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

எனது பெற்றோர்கள் தங்கள் வழக்கு விசாரணையில் சிபிஐ க்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அவர்கள் வெளிநாட்டுப் பயணம் செல்லக்கூடாது என சிபிஐ மற்றும் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. மத்திய  அரசுக்கு எதிராகப் பேசியதற்காக என் பெற்றோர்களை அரசு பழி வாங்கி வருகிறது. மேலும் ஊடகங்களை மிரட்டவும் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.