நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’

அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை . ஆனால் யாமி கெளதம் நாயகியாக நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரியும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில்,அஜித்துடன் பிரசன்னா நடித்து வருவதாகப் பலரும் தகவலைப் பரப்பி வருகிறார்கள். ஏனென்றால், ட்விட்டர் தளத்தில் பிரசன்னாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ”’வலிமை’ படத்தில் பிரசன்னா. பதிலளியுங்கள் அண்ணா” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு “இல்லை ப்ரோ. தகவலுக்காகக் காத்திருக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார் பிரசன்னா.

இந்த பதில் ஒன்றே போதும் அவர் நடிப்பது உறுதி செய்ய .ஏனென்றால் அஜித்துடன் நடித்தவர் எவரும் இதுவரை அஜித்துடன் நடிப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு இல்லாமல் வெளியில் கொல்வதில்லை.