தேசிய விருது பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் தியாகராஜன்…!

--

சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற படம் இது .

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்த பியானோ கலைஞர் கதாபாத்திரத்தில் நடிகர் பிரஷாந்த் நடிக்கவுள்ளார்.

You may have missed