பொருளாளர் பதவிக்கு கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டி…!

2019 – 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், வருகிற 23 ஆம் தேதி டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பொருளாளராக பிரசாந்த் போட்டியிடுகிறார்.

தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியராகப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் பாக்யராஜ் தலைமயிலான அணிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karthi, Nadigar Sangam, Prasanth, Treasurer
-=-