ஜோதிராதித்ய சிந்தியா விலகல் குறித்து பிரசாந்த் கிஷோர் விமர்சனம்….

டெல்லி:

த்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் இளந்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஜோதிராதித்யா சிந்தியா குறித்து விமர்சனம் செய்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை காந்தி வழிநடத்துவதாக பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல, ஜோதிராதித்யா சிந்தியாவும் நினைத்துக்கொண்டிருக்கிறார்…

உண்மை என்னவென்றால், அவரது குடும்பப்பெயருக்கு பின்னால் உள்ள சிந்தியாதான் அவரை பிரபலப்படுத்தியது… அவரது தந்தையான மாதவ்ராவ் சிந்தியா ஒரு  வெகுஜனத் தலைவர், அரசியல் அமைப்பாளர்  அவரது மவுசுதான் இவரை அடையாளம் காட்டியது... என்று தெரிவித்து உள்ளார்…

ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த மாதவ்ராவ் சிந்தியா நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கம் ஆனவர். இவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருக்கும் நெருக்கம். இவர்கள் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். இந்த நிலையில்தான் அவரது மகனான ஜோதிராதித்யா சிந்தியா தற்போது காங்கிரஸ் கட்சிக்கே எதிராக கிளம்பி இருக்கிறார்.

இன்று  மாதவ்ராவ் சிந்தியாவின் பிறந்த நாள். இதையொட்டி,  மத்திய பிரதேசத்தில் பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.