‘பரோஸ்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரதாப் போத்தன் ஒப்பந்தம்….!

‘மை டியர் குட்டிச்சாத்தான்’ இயக்குநர் ஜிஜோ ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘பரோஸ் –கார்டியன் ஆஃப் டி-காமாஸ் ட்ரெஷர்’ என்னும் போர்ச்சுகீசியர்கள் குறித்த கதையை மோகன்லால் இயக்கவுள்ளார்.

இந்தக் கதையில் ஸ்பானீஷ் நடிகர்களுடன் இணைந்து, பரோஸ் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் பிரதாப் போத்தன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். பல வருடங்களுக்குப் பின் மோகன்லால் – சந்தோஷ் சிவன் இணைந்து பணிபுரியவுள்ளனர். லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.