நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வரும் பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார்.தேசியவிருது வாங்கிய நடிகர்.

இவர்பிறந்தது கேரளா. ஆனா, சின்ன வயசுலேயே தமிழ்நாட்டுக்கு வந்தவர். ஊட்டி காலேஜ் படிப்புக்காக சென்னைக்கு வந்த இவர் பி.ஏ எக்கனாமிக்ஸ் படித்தார். காலேஜில் நிறைய மேடை நாடகங்கள்ல நடித்துள்ளார்.

சினிமா மேல் அவருக்கு ஈர்ப்பு வர காரணம், அவரது அண்ணன் தயாரிப்பாளர் ஹரி தான்.

பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமானார்.

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வரும் பிரதாப் போத்தன் ஆகஸ்ட் 13 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் பல்வேறு பிரபலங்களும் தற்போது இவருக்கு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலமும் தொலைபேசி மூலமும் பகிர்ந்து வருகின்றனர்.