டில்லி:

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு பயணம் தேவையான என விசுவ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பு தலைவருக்கான தேர்தலில், இமாச்சர பிரதேச முன்னாள் ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே வெற்றி பெற்றார். இந்நிலையில்,

விஹெச்பியின் புதிய சர்வதேச தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரவீண் தொகாடியாவின் ஆதரவாளரான ராகவா ரெட்டியை தோற்கடித்து, ஹிமாசல் முன்னாள் ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே வெற்றி பெற்றார்.

இதைடுத்து விஎச்பி அமைப்பில்  இருந்து விலகுவதாக அறிவித்துள்ளா  தொகாடியா, மத்திய அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.

‘மத்திய பாஜக அரசு, அந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டதாகவும், அதைக் கண்டித்து, குஜராத் மாநிலம், ஆமதாபாதில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும்,  காஷ்மீர், உத்தரபிரதேசம் என நாட்டின் பல பகுதிகளில் குழந்தைகள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பிரதமர் மோடியோ வெளிநாட்டில்  சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.  தற்போதைய சூழ்நிலையில், மோடிக்கு வெளிநாட்டு பயணம் தேவையா? என கேள்வி எழுப்பினார்.

‘இன்றைய சூழலில், நாட்டின் எல்லைகளில் ராணுவத்தினருக்கு பாதுகாப்பில்லை; விவசாயிகள் தற்கொலை முடிவை தேடிக் கொண்டிருக்கின்றனர், நமது மகள்களோ வீட்டில்கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளனர் என கூறிய தொகாடியா பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.