பிரவீன் தொகாடியா தொடங்கிய புதிய இந்து அமைப்பு

டில்லி

முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா நேற்று ஒரு புதிய இந்து அமைப்பை தொடங்கி உள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்தவர் பிரவீன் தொகாடியா.   விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வ தேச தலைவர் தேர்தலில்  இவருடைய ஆதரவாளர் ராகவ் ரெட்டி தோற்கடிக்கப்பட்டார்.  அதனால் பிரவீன் தொகாடியா பதவி விலகினார்.  அது முதல் அவர் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.    அத்துடன் ஜூன் 24 ஆம் தேதி ஒரு புதிய அமைப்பை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.

நேற்று அவர் தனது புதிய இந்து அமைப்பான அந்தர் ராஷ்டிரிய இந்து பரிஷத் என்னும் அமைப்பை தொடங்கி உள்ளார்.    அதன் மூலம் அவர் இந்துக்களின் வாக்குகளை வரும் தேர்தலில் ஒன்றிணைக்க எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்.   அவர் தனது அமைப்பு தொடக்க விழாவில் மோடி அரசு அயோத்தியில் ராமர் கோவிலை கட்டாமல் கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றி விட்டதாக கூறி உள்ளார்.

மேலும் பிரவீன் தொகாடியா, “இந்த அமைப்பின் மூ,அம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மக்களவையில் உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும், விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலை, வேலை அற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு,  வேலை அற்றோருக்கு நிவாரணத் தொகை உள்ளிட்டவைகளை உறுதி செய்ய போரட்டம் நடத்தப்படும்.

இந்த அமைப்பின் மூலம் நான் என்றும் இந்துக்களுக்கான மரியாதைக்கும் நன்மைக்கும் போராடுவேன்.    இன்று இந்து மக்கள் அனைவரும் தாங்கள் நம்பி ஆதரித்த அரசு தங்களை ஏமாற்றியதால் சினம் கொண்டுள்ளனர்.    அவர்கள் மாற்று அமைப்பை தேடுகின்றனர்.

அவர்களுக்கு நான் என்னால் முடிந்ததை அடுத்த வருடம் அக்டோபருக்குள் செய்வேன் என உறுதி கூறுகிறேன்.    இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நான் லக்னோவில் இருந்து அயோத்தி வரை எனது கோரிக்கையை வலியுறுத்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

You may have missed