--

ப்ரான் பிரியாணி

ப்ரான் (இறால் ) – 1 /2 கிலோ
பாசுமதி அரிசி – 1 /2 கிலோ
வெங்காயம் – 3 ( எண்ணையில் வறுத்தெடுத்தது )

இறால் ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டிய பொருட்கள் :-

தயிர் – 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
தனியா தூள் – தேவைக்கேற்ப
கரம் மசாலா – தேவைக்கேற்ப
புதினா – பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி – பொடியாக நறுக்கியது
வறுத்த வெங்காயம் – தூளாக்கி

இவை அனைத்தும் சேர்த்து இறாலில் பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

செய்முறை :-

ப்ரஷர் குக்கரில் 2 ஸ்பூன் நெய் , 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை இலவங்கம் ஏலக்காய் சேர்த்து வெடித்ததும் ஊற வைத்த இறாலை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

அரிசியை களைந்து அதனுடன் சேர்க்கவும்.

வறுத்த வெப்பிகாயத்தை சேர்க்கவும்

அரிசியின் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை ஒரு மூடி போட்டு மூடி அதன் மேல் கனமான கல்லை வைக்கவும் .

10 – 15 நிமிடம் கழித்து லேசாக கிளறவும் .

ப்ரான் பிரியாணி ரெடி …புராணி ரைத்தாவுடன் பரிமாறவும்.