ஐபிஎல் போட்டியில் விளையாடும் 16 வயது இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மன்

புதுடெல்லி:

ஐபிஎல் போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை 16 வயதாகும் பிரயாஸ் ரே பர்மன் பெற்றுள்ளார்.


சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி சார்பில் விளையாடினார்.

இதற்கு முன்பு இளம் வீரர் என்ற பெயர் கிங்க்ஸ் பஞ்சாப் அணிக்கு 2018-ம் ஆண்டு விளையாடிய ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் பெற்றிருந்தார்.

அப்போது அவருக்கு 17 வயது என்பது குறிப்பிடத்தக்கது.