கருணாநிதி நலம் பெற பிரார்த்தனை….இலங்கை அதிபர் ஸ்டாலினுக்கு கடிதம்

சென்னை:

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இலங்கை எம்.பி. ஆறுமுகன் தொண்டமான், அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று வந்தனர். அவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.

அப்போது, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, கருணாநிதி நலம் பெற வேண்டி எழுதிய கடிதத்தையும் அவர்கள் ஸ்டாலினிடம் கொடுத்தனர். ‘‘உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 

புகைப்படம் உதவி ஏஎன்ஐ: நன்றி

You may have missed