வாஷிங்டன்

மெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடக்க உள்ள கொள்ளை மற்றும் வன்முறைகளுக்காகப் பல நகரங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

 

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை மறுநாள் அதாவது மூன்றாம் தேதி அன்று நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் களத்தில் உள்ள தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அதிபர் தேர்தலை அமைதியாக நடத்த அரசு கடும் முயற்சி எடுத்துள்ளது.   இந்நிலையில் அமெரிக்க நகரங்களில் தேர்தல் முடிந்த பிறகு கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த வன்முறை சம்பவங்கள் டிரம்ப் அல்லது பிடன் யார் வென்றாலும் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.  அனைத்து நகரங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

அவற்றின் விவரங்கள் வருமாறு :

நியூயார்க் நகர கடைகளின் முகப்புக்கள் யாரும் நுழைய முடியாதபடி மரப் பலகைகள், இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டுள்ளன.

 

 

இதே நிலை வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலஸ், டென்வெர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நிலவி வருகிறது.

பாதுகாப்பு அதிகாரிகள் கொள்ளை மற்றும் வன்முறை நிகழ்வுகளைச் சமாளிக்கத் தயார் நிலையில் உள்ளனர்.

நவம்பர் 3 ஆம் தேதி வெள்ளை மாளிகை அருகே இடது சாரியினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்ததால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிடன் வெற்றி பெற்றால் வலது சாரியினர் கலவரம் நிகழ்த்தலாம் என அச்சம் எழுந்துள்ளதால் தேசியப் பாதுகாப்பு அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.