சென்னை:

மிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ள நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடம் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர்,  வானிலை ஆய்வு மைய தகவலின் படி, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளது.

மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீது கவனம் செலுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல,  மீன்வளத்துறை மூலமாக அனைத்து மீனவர்களுக்கும் உரிய முறையில் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதுபோல குமரி மாவட்டத்தில், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற படகுகளில் 7 படகுகள் கடலுக்குள் உள்ளன. அதில் 2 படகுகளை தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து அவர்கள் இணைப்பில் உள்ளனர். மீதமுள்ள 5 படகுகளை தொடர்பு கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தங்கு கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 99 சதவீத படகுகள் திரும்பி விட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.