பருவ மழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: எடப்பாடி பழனிசாமி

--

மதுரை:

மிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் தலைமை செயலாளர் தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மழை பாதிப்பில் இருந்து பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக  மதுரையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட முக்கிய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டம் முடிந்ததும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும்  ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது,

‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க பிரதமரை சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் தொடங்க உள்ள  பருவமழை காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 3 முறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு, தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழை கொரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் நடிகர் விஜய் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டு மானாலும் கட்சி தொடங்கலாம்; கருத்து தெரிவிக்கலாம்’ என்றார் முதல்வர்.

அதைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், இன்று நடைபெற்ற கட்சி  ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினருக்கு முதல்வர்  பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தமிழகத்தில் எப்போது வந்தாலும் அதிமுக கட்சி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் கூறினார்.