உண்ட வீட்டுக்கு இரண்டகம்: பிணத்துடன் உடலுறவு கொண்ட காமுகர்கள்..!

 

பெங்களுரு:

னது கடையில் வேலை செய்த முன்னாள் வேலையாளால் கொலை செய்யப்பட்டு, இறந்த பெண்ணுடன் உடலுறவு கொண்ட காமுகர்களை போலீசார் கைது  செய்தனர்.

rape-and-murder

பெங்களுரில் பானி பூரி கடை நடத்தி வரும் பிரதாப் என்பரின் கடையில் வேலை செய்து வந்த முன்னாள் வேலைக்காரன் சம்பள பாக்கி கேட்க வீட்டுக்கு வந்தபோது, கடை ஓனரின் மனைவியின் நகையை கொள்ளை அடித்துவிட்டு, கொலை செய்து, பின்னர் அந்த பெண்ணின் உடலுடனுடன் உறவு கொண்டுள்ளான்.

பிரதாப்பின் பானி பூரி கடையில் வேலை பார்த்து வந்த உத்திர பிரதேசத்தை சேர்ந்த ராஜீவ் என்ற இளைஞர் கடந்த ஆண்டு வேலையை விட்டு நின்றுள்ளார். அவருக்கு 7,500 ரூபாய் சம்பளம் பிரதாப்  கொடுக்க வேண்டி யிருந்திருக்கிறது. அதை கேட்க தனது நண்பன் ஷ்யாம் என்பவனோடு பிரதாப் வீட்டிற்கு ராஜிவ் சென்றுள்ளார்.

ஆனால் அவர்கள் சென்றபோது பிரதாப் வீட்டில் இல்லை. அவருடைய மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது இரண்டு குழந்தை களும் வீட்டின் மற்றொரு அறையில் இருந்துள்ளனர். வீட்டில் வேறு யாரும் இல்லாததை அறிந்து கொண்ட இருவரும், அந்த பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்தனர். அப்போது அந்த பெண் முரண்டு பிடித்த்தால் அவரை கொலை செய்துள்ளனர்.  பின்னர் மோகம் தலைக்கேற, இறந்த அந்த பெண்ணின் உடலோடு இருவரும் உறவு கொண்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவந்தமாக போலீசார் விசாரணை நடத்தி  கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலையாளிகள் ராஜிவ் மற்றும் ஷ்யாமை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில்,  அவர்கள் இருவரும் கொள்ளை, கொலை செய்து இறந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டது தெரியவந்தது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இறந்த பெண்ணுக்கு இரண்டு மனநலம் சரியில்லாத குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி