நட்சத்திரங்களுக்கான (ராகு கேது, குரு, சனிப் பெயர்ச்சி ) “சுருக்” பலன்கள்

ட்சத்திரங்களுக்கான (ராகு கேது, குரு, சனிப் பெயர்ச்சி ) “சுருக்” பலன்கள்

ஜோதிட ரத்னா வி.ஜே. ராஜகுலோத்துங்கன்

அசுபதி ஆடி மாதத்துக்குப் பிறகு ஓரளவு நற்பலன்கள் கிடைக்கும். ஆவணியில் மிக நல்ல பலன். மார்கழிக்குப் பிறகு ஓகோதான். ஜமாய்ப்பீர்கள்.

பரணி ஆடி மாதத்துக்குப் பிறகு மனதில் நிம்மதி ஏற்படும். . ஆவணியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மார்கழிப் பிறகு யோகமான காலம். .

கிருத்திகை ஆடிக்குப் பிறகு சில பிரச்சினைகள் தீரும். ஆவணியில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்கழிக்குப் பிறகு பெரும்பாலான பிரச்சினைகள் தீரந்து மனதில் அமைதி நிலவும்.

ரோகிணி ஆடிக்குப் பிறகு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆவணியில் மன நிறைவு கிடைக்கும். மார்கழிக்குப் பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பொருளாதார ஏற்றம் இருக்கும்.

மிருகசீரிஷம் ஆடிக்குப் பிறகு மனதில் தைரியம் பெருகும். ஆவணிக்கு பிறகு உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டயது அவசியம். மார்கழிக்குப் பிறகு எந்தவொரு விசயத்தில் ஈடுபடும்போதும் மிகுந்த கவனம் தேவை.

திருவாதிரை ஆடிக்குப் பிறகு செல்வம் பெருகும். அதே நேரம் பேச்சில் நிதானம் தேவை. ஆவணிக்கு பிறகு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். . மார்கழிக்குப் பிறகு வாகனத்தில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புனர்பூசம் நீண்டநாட்களாக வாங்க நினைத்து முடியாமல் போன பொருட்களை ஆடிக்கு பிறகு வாங்குவீர்கள். அதே போல தடைபட்டுக்கொண்டே போன குடும்ப சுப நிகழ்ச்சிகளில் ஆவணிக்குப் பிறகு நடக்கும். மார்கழிக்குப் பிறகு எந்த விஷயத்திலும் மிகுந்த திட்டமிடலோடு இறங்குங்கள்.

பூசம் தடைபட்டிருந்த காரியங்கள் ஆடிக்குப் பிறகு ஜோராக நடக்கும். ஆவணிக்கு பிறகு வீடு மனை வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. கல்வித் தடைகள் நீங்கும். மார்கழிக்குப் பிறகு நினைத்ததெல்லாம் நடக்கும்.. தொட்டதெல்லாம் துலங்கும்.

ஆயில்யம் ஆடிக்குப் பிறகு ஓரளவு நற்பலன்கள் ஏற்படும். ஆவணிக்கு நல்ல காலம்தான். வீடு மனை யோகம் உண்டு. மார்கழிக்குப் பிறகு கூடுதலான நற்பலன்கள் ஏற்புடும்.

மகம் ஆடிக்குப் பிறகு நன்மைகள் நடக்கத் துவங்கும். ஆவணிக்கு பிறகு யோகமான காலம்தான்.

பூரம் தடைகள் அனை்ததும் ஆடிக்குப் பிறகு நீங்கும். ஆவணிக்கு பிறகு மனதில் தைரியம் ஏற்படும். புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். . மார்கழிக்குப் பிறகு வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.

உத்திரம் ஆடிக்குப் பிறகு நற்பலன்கள் ஏற்படும். ஆவணிக்கு பிறகு அந்தஸ்து உயரும். மார்கழிக்குப் பிறகு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஹஸ்தம் ஆடிக்குப் பிறகு பொருளாதரத்தில் ஏற்றம் ஏற்படும். ஆவணிக்கு பிறகு தொழில் சிறக்கும். . மார்கழிக்குப் பிறகு வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும்.

சித்திரை ஆடிக்குப் பிறகு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆவணிக்கு பிறகு குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும்.

ஸ்வாதி ஆடிக்குப் பிறகு மனதில் மகிழ்ச்சி நிலவும். ஆவணிக்கு பிறகு குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.

விசாகம் ஆடிக்குப் பிறகு தொழிலில் முக்கிய மாறுதல்கள் ஏற்படும். இது ஏற்றம் தருவதாகவே இருக்கும். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

அனுஷம் ஆடிக்குப் பிறகு பொருளாதாரத்தில் ஏற்றமான காலம் துவங்குகிறது. . பாதித்திருந்த உடல் நலன், ஆவணிக்கு பிறகு நலமாகும். . மார்கழிக்குப் பிறகு மனதில் நிம்மதி உருவாகும்.

கேட்டை ஆடிக்குப் பிறகு பணத் தட்டுப்பாடு அகலும். ஆவணிக்கு பிறகு சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணம் செலவாகும். மார்கழிக்குப் பிறகு காரியத் தடைகள் நீங்கும்.

மூலம் ஆடிக்குப் பிறகு வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆவணிக்கு பிறகு தொழிலில் லாபம் கூடும். மார்கழிக்குப் பிறகு சோம்பல் அதிகரிக்கும். இதனால் காரியத்தடைகள் ஏற்படும். உஷார்.

பூராடம் ஆடிக்குப் பிறகு பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். ஆவணிக்கு பிறகு பணி உயர்வு அல்லது இடமாற்றம் ஏற்படலாம். .

உத்திராடம் ஆடிக்குப் பிறகு முதலீடுகளில் எச்சரிக்கை தேவை. ஆவணிக்கு பிறகு அரசாங்க அனுகூலம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மார்கழிக்குப் பிறகு பணியிலும் உடல் நலத்திலும் கவனம் தேவை.

திருவோணம் ஆடிக்குப் பிறகு வீண் சச்சரவுகள் ஏற்படலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும்போது வீண் விவாதங்களை தவிர்க்கவும். ஆவணிக்கு பிறகு தொழில் ஏற்றம் உண்டு. மார்கழிக்குப் பிறகு திட்டமிட்ட காரியங்களில் தொய்வு ஏற்படலாம். மன உறுதியுடன் செயல்பட வேண்டிய காலம் இது.

அவிட்டம் ஆடிக்குப் பிறகு பொருளாதார தேக்க நிலை மாறும். ஆவணிக்கு பிறகு தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு – இட மாற்றம் வரலாம். மார்கழிக்குப் பிறகு காரியத்தடைகள் ஏற்படலாம். .

ஸதயம் ஆடிக்குப் பிறகு வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். ஆவணிக்கு பிறகு முழுமையான நல்ல காலம் பிறக்கிறது. மார்கழிக்குப் பிறகு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

பூரட்டாதி ஆடிக்குப் பிறகு புத்தியில் தெளிவு. ஆவணிக்கு பிறகு மாற்றம். மார்கழிக்குப் பிறகு தொழில் இருந்த தொய்வு நீங்கும்.

உத்திரட்டாதி ஆடிக்குப் பிறகு எந்த விஷயத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டியிருக்கும். ஆவணிக்கு பிறகு பொருளாதாரம் மேம்படும். மார்கழிக்குப் பிறகு தொழில் விருத்தியாகும்.

ரேவதி ஆடிக்குப் பிறகு வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. பொறுமை அவசியம். ஆவணிக்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். மார்கழிக்குப் பிறகு பணி உயர்வு கிடைக்கும்.