லப்புரம்

ட்டாசு வைத்திருந்த அன்னாசிப் பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை பட்டாசு வெடித்து வாய்ப் புண்ணாகித் தவித்து பரிதாபமாக மரணம் அடைந்துள்ளது.

கேரள மாநிலத்தின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும்.    இந்த விலங்குகளை விரட்ட இங்குள்ள மக்கள் ஒரு கொடூரமான நடவடிக்கையைச் செய்துள்ளனர்.  அங்குள்ள பழங்களில் பட்டாசுகளை மறைத்து வைத்துள்ளனர்.  இந்தப் பகுதியில் உலவி வந்த ஒரு கர்ப்பிணி யானை பட்டாசு உள்ள அன்னாசிப் பழத்தை தின்றுள்ளது.

அன்னாசிப் பழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் சக்தி வாய்ந்தவை என்பதால் அது வெடித்ததில் யானையின் வாய், நாக்கு போன்ற பகுதிகள் கடும் சேதம் அடைந்தது.   வலியால் துடித்த யானையால் எதுவும் உண்ண முடியவில்லை.  அங்கும் இங்கும் சுற்றி வந்துள்ளது.   அந்த யானை கிராமத்தில் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத யானையாகும்

அந்த யானை அப்போதும் தனது வயிற்றில் இருக்கும் குட்டியை நினைத்துக் கதறியபடி அங்குள்ள வெள்ளியார் ஆற்றில் வந்து நீரில் தனது இடுப்பு படும்படி நின்றபடியே இருந்தது.   வலியைத் தாங்க முடியாமல் அவ்வப்போது வாயில் நீர் படும்படி செய்து கொண்டது.   அந்த யானையை மீட்க இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.  ஆனால் யானை எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.

இந்நிலையில் யானை கடந்த 27 ஆம் தேதி ஆற்றில் நின்றபடியே தனது உயிரை விட்டுள்ளது. இதையொட்டி அந்த யானையின் உடலை எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தபட்டுளது.   பட்டாசு வெடித்ததில் யானையின் முகம் கடுமையாகச் சேதம் அடைந்து புண்கள் இறக்கும் வரை ஆறாமல் இருந்துள்ளது.   அந்த யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.