புகைப்பிடிப்பதை எதிர்த்த கர்ப்பிணிப் பெண் ஓடும் ரெயிலில் கொலை

ஷாஜகான்பூர்

ஷாஜகான்பூர் அருகே ரெயில் சென்றுக் கொண்டிருந்த போது புகைப்பதை எதிர்த்த ஒர் கர்ப்பிணிப் பெண் ரெயிலில் கொல்லப்பட்டுள்ளார்.

 

நேற்று இரவு பஞ்சாபில் இருந்து உ.பி. வழியாக பீகார் செல்லும் ஜாலியன் வாலா பாக் ரெயில் உத்திரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் அருகே சென்றுக் கொண்டிருந்தது. அந்த ரெயிலில் ஒரு பெட்டியில் சோனு யாதவ் என்பவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார். அதை யாரும் தட்டிக் கேட்கவில்லை.

அதே ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண்ணான சன்னத் தேவி புகைப்பிடிப்பதை எதிர்த்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. சோனு யாதவ் சன்னத் தேவியின் கழுத்தை நெரித்துள்ளார். அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார்.

ஷாஜகான்பூரில் ரெயில் நின்றதும் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனல் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் சோனு யாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.