Random image

ஆந்திரா: பிரசவத்துக்காக 45 கி.மீ. தூரம் டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி

ஐதராபாத்:

சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி மனைவியை பிரசவத்துக்காக 45 கி.மீ., தூரம் டோலியில் தூக்கிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

சிறந்த சுகாதார பணியாளர் விருது பெற்ற மாலதி லதா

ஆந்திரா மாநிலம் நாலாமல்லா வனப்பகுதியை சேர்ந்த குடுமுலா அஞ்சம்மா. பழங்குடியின கூலி தொழிலாளியான இவர் கர்ப்பமாக இருந்தார். இவருக்கு டாக்டர் தெரிவித்த தேதியை விட முன்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டது.

இந்த பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல போதுமான சாலை வசதி இல்லை. இதையடுத்து அந்த பெண்ணின் கணவரும், சகோதரரும் சேர்ந்து டோலி மூலம் அந்த பெண்ணை 45 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு இரவோடு இரவாக தூக்கி வந்து சேர்த்தனர்.

இங்கு சுகாதார பணியாளர் மாதவி லதா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க உதவிய அந்த மாதவி, அந்த பெண்ணுக்கு மாற்று ஆடைகளும், உணவும் வழங்கி வனப்பகுதியில் அவர்களின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தார்.

துணை நர்ஸ் மருத்துவச்சி மூலம் குழந்தை பெற்றெடுத்ததில் அஞ்சம்மா முதல் பெண் கிடையாது. இது போன்று பழங்குடி இனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கடந்த 10 ஆண்டுகளாக இவரிடம் குழந்தை பெற்றுள்ளனர்.

‘‘பழங்குடி இன மக்களில் சிலர் அச்சம் காரணமாக சீலிங் பேன் அடியில் படுத்து தூங்கமாட்டார்கள். அது விழுந்துவிடும் என்று அஞ்சுவார்கள். அனைத்து மருந்துகளும் இங்கு எப்போதும் கிடைக்கும் என்று கூற முடியாது.

நள்ளிரவு 11 மணிக்கு மாற்று ஆடை கூட இல்லாமல் அந்த பெண் பிரசவத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்’’ என்றார் மாதவி லதா. சுகாதார பணியாளர் மாதவிக்கு ஜூனியர் சேம்பர்ஸ் இன்டர்நேஷனல் சிறந்த சுகாதார பணியாளர் என்ற விருதை வழங்கி கவுரவிததுள்ளது.