இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக பிரேம்ஜி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவருடன் ஸ்வயம் சித்தா, ‘பிக் பாஸ்’ ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சரண் ஆர்வி, எடிட்டராக வெங்கட் பணிபுரியவுள்ளனர். இப்படத்தை சமீர் பரத்ராம் தயாரிக்கவுள்ளார்.