பிரேம்ஜிக்கு திருமணமா…? வாழ்த்தும் ரசிகர்கள்…!

நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி .

இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் கேம் ஓவர்’ என்று தலைப்பிட்டு திருமண வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் பிரேம்ஜி.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் பலர் அவருக்கு உண்மையிலேயே திருமணம் முடிந்துவிட்டதா என்ற அதிர்ச்சியுடன் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் பிரேம்ஜி வெளியிட்டிருக்கும் திருமண வீடியோ அவர் நடித்த படத்தில் எடுக்கப்பட்ட காட்சி தான் .