”கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்” கமல் டுவிட்

சென்னை,

த்திய மாநிலஅரசுகள் குறித்தும், மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல் குறித்தும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல், தற்போது கோவிலை கொள்ளையடிப்பவர்களை தாக்குவோம் என்று டுவிட் செய்துள்ளார்.

அரசியலுக்கு வருவேன் என்றும், அதுகுறித்து அடுத்த ஆண்டு அறிவிப்பேன் என்றும் கூறி உள்ள நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் குறித்து ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், “கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது” என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. கமல் வன்முறையை தூண்டி விடுகிறாரா? என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அவர் முயற்சி செய்கிறாரா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

நேற்று, தருமபுரி வந்திருந்த  ரஜினியின் சகோதரர், ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வரும் ஜனவரியில் வரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.