பியானோ இசைக்கருவியை வாசித்து உலக அரங்கத்தையே அதிர வைத்த சென்னை சிறுவன்!

பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலகளவில் அரங்கத்தையே அதிர வைத்த சென்னை சிறுவனை ஏ.ஆர்.ரகுமான், அனிரூத் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

lidiyan

அமெரிக்காவில் ‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. இதில் பல திறைமைசாலிகள் கலந்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவனும் கலந்து கொண்டார்.

பியானோ இசைக்கருவியை வாசிப்பத்தில் அசாத்திய திறமைப்படைத்த லிடியன் 1990ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார். முதலில் சாதாரணமாக வாசிக்க தொடக்கிய லிடியன் வேகமெடுத்து அந்த இசையை வாசித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். லிடியன் வாசிப்பதை கேட்டு அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்ட உற்சாகமடைந்த அந்த சிறுவன் பல அடங்கு வேகத்தில் பியானோவை வாசித்தான்.

முதலில் சாதாரணமாக வாசிக்க தொடங்கி நிமிடத்திற்கு 208 பீட்ஸ், 325 பீட்ஸ் என வேகத்தின் உச்சிக்கு சென்று பியானோவை வாசித்த லிடியன் வேகத்தின் உச்சத்திற்கே சென்றான். பியானோவை அவ்வளவு வேகத்திற்கு சிறு பிழைக்கூட இல்லாமல் துணிச்சலாக வாசித்த லிடியனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ஏஆர் ரகுமான், அனிரூத், ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டதுடன், இதுபோன்ற சிறந்த இசையை இதுவரை பார்த்ததில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.