லாஸ்ஏஞ்சலிஸ்: டெஸ்லா எனும் எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், தற்போதைய நிலையில் உலகின் நம்பர்-1 பணக்காரராக உயர்ந்துள்ளார்.

இவர், அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசோஸை பின்தள்ளி, முதல் நிலையை அடைந்துள்ளார். இவர் நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் பெரியளவில் ஏறியதையடுத்து, இந்த நிலையை அடைந்துள்ளார்.

சந்தையில் அவரின் பங்குகள் 700% உயர்ந்துள்ளது. மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 185 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த மஸ்க், டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து ஏரோஸ்பேஸ் தொடர்பான ஸ்பேஸ்X நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டில்தான், இவரது நிறுவனப் பங்குகள் எதிர்பாராத வகையில் பெரியளவில் ஏற்றம் கண்டது.

இந்த ஏற்றத்தை அடுத்து, இதற்கு முன்னர் உலகின் மிகப்பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை தக்கவைத்திருந்த ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி, உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.