தஹில்ரமனியின் ராஜினாமா ஏற்பு: தற்காலிக தலைமை நீதிபதியாக வினித் கோத்தாரி நியமனம்

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமனியை  மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்த நிலை யில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு, சென்னை உயர்நீதி மன்றத்தின் தற்காலிக புதிய தலைமை நீதிபதியாக  வினித் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமனி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்தப் பணி மாற்றத்தால் அதிருப்தி அடைந்த தஹில் ரமனி, இடமாற்ற நடவடிக்கையை ரத்து மறுபரிசீலனை செய்யும் உச்சநீதி மன்ற  கொலிஜியத் துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால், தனது பதவியை தஹில் ரமனி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். இதன்மீது முடிவு தெரியாமல், டந்த 15 நாட்களாக தலைமை நீதிபதி இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் தஹில் ரமனியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

“தஹில் ரமனி தனது பதவியை ராஜினாமா செய்வதாக செப்டம்பர் 6 அன்று கடிதம் அனுப்பி யிருந்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பொறுப்பு நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேகாலயா தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டலை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தஹில் ரமனி ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக குறைந்தது உள்ளது.  நீதிபதி காலி பணியிடங்கள் 18 ஆகவும் அதிகரித்தது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி