ஆர் எஸ் எஸ் பிரமுகருக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவி
டில்லி
ஆர் எஸ் எஸ் பிரமுகர் உட்பட நால்வருக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் ராஜ்யசபை என அழைக்கப்படும் மேலவையில் இலக்கியம், அறிவியல். சமூக சேவை உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குவோரில் 12 பேரை மத்திய அரசு நியமிப்பது வழக்கம். தற்போது இது போல 8 பேர் உள்ளனர். மீதமுள்ள நால்வரை மோடியின் தலைமையிலான மத்திய அரசு பரிந்துறை செய்தது.
இவ்வாறு பரிந்துரை ஆர் எஸ் எஸ் பிரமுகர் ராகேஷ் சின்ஹா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராம் ஷாகல், நடனக் கலைஞர் சோனல் மான்சிங் மற்றும் சிற்பக்கலை ஆசிரியர் ரகுநாத் மகோபாத்ரா ஆகியோர் ராஜ்யசபை உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டுள்ளார்.