லலித் கலா அகாடமி தலைவராக மும்பை சிற்பி உத்தம் பச்சார்னே நியமனம்

மும்பை:

லலித் கலா அகாடமியின் தலைவராக மும்பையை சேர்ந்த சிற்பி உத்தம் பச்சார்னே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இவர் இந்த பதவியில் 3 ஆண்டுகள் வரை இருப்பார்.

உத்தம் பச்சர்னே பிரபல கலைஞரரும், சிற்பியும் ஆவார். இவர் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தனர். தற்போது இவர் கோவா கலா அகாடமியின் ஆலோசனை குழு உறுப்பிறறனராக உள்ளார். மேலும், பி.எல். தேஷ்பாண்டே அரசு லலித் கலா அகாடமியின் ஆலோசனை குழு உறுப்பினராகவும். போரிவாலி ஜன் சேவா சாகாகாரி வங்கி இயக்குனராகவும் உள்ளார்.

61 வயதாகும் இவர் சுவாமி விவேகானந்தர், அம்பேத்கர், வீர் சர்வார்கர், சத்திரப்பதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகளை வடிவமைத்துள்ளார். இவை நாட்டின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிராவில் மட்டும் இவர் வடிவமைத்த 8 சிவாஜி சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் லக்னோ பல்கலைக்கழகத்தில் இவர் வடிவமைத்த 13 அடி சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.